TNPSC group 4 Results 2022
TNPSC group IV Exam Result 2023
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி இன்று 14.02.2023 பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Table of Contents
TNPSC Group 4 Exam 2022 Results
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு. அதற்கான தேர்வை கடந்த ஆண்டு ஜூலை 24 ல் நடத்தியது இதற்கு பத்தாம் வகுப்பு தகுதி என்பதால் 18 லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் தேர்வு முடிந்து 6 மாதத்திற்கும் மேலாகியும் தேர்வு முடிவுகள் வராததால். தேர்வகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதற்கிடையில் பல்வேறு விதமான வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவியது. ஆகையால் தேர்வர்களுக்கு விளக்கம் கொடுக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
TNPSC Group 4 Results செய்தி குறிப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு IV எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இததோவிற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வினில் பங்கேற்றனர். இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நடத்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வாணையத்தின் கடுமந்தணத்தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டும். எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளங்காணப்பட்டு அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது. விடைத்தாட்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி, தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது.
கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தோவர்கள் பங்கேற்ற நிலையில் 2022ல் நடைபெற்ற தோவில் ஏறத்தாழ லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர் 18 என்பதும். இம்முறை விடைத்தாட்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து, பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
அதன்படி மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய OMR விடைத்தாட்களின் எண்ணிக்கை 35 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளமை கடந்த தேர்வுகளை ஒப்பிடும்போது, ஏறக்குறைய மும்மடங்கு கூடுதலான வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.
TNPSC GROUP 4 தேர்வு மார்ச் மாதம் வெளியீடு
மேற்கண்ட காரணங்களினாலும், இதே காலத்தில் தேர்வாணையம் பல்வேறு பணித்தேர்வுகளையும் மற்றும் துறைத்தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருவதாலும், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடையறாது பணியாற்றி இத்தேர்வின் அனைத்து மிக முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து. எவ்வித தவறுக்கும் இடம் தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சார்ந்த வதந்திகளை நம்ப வேண்டாம்
ஆகையால், தேர்வர்கள் இத்தேர்வு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்டவாறு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
காலிப்பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?
பல்வேறு துறைகளின் காலிப்பணியிடம் குரூப் 4 தேர்வில் இணைப்பதாக செய்திகள் வந்துள்ளது தோராயமாக 2500 முதல் 3000 ஆயிரம் காலிப்பணியிடம் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து இதுபற்றி அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் TNPSC Group 4 Cut off 2022 தெரிந்து கொள்ள Click here