TNPSC GROUP 4 CUT OFF 2022( Expected)
TNPSC GROUP 4 CUT OFF 2022 |
Tamilnadu public service commission ( TNPSC) Conducted the examination Combined civil service examination -IV ( Group 4) on 24.07.2022
TNPSC GROUP 4 EXAM 2022
குரூப் 4 & VAO தேர்வு 24.07.2022 அன்று நடந்தது. இந்த தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து இருந்த நிலையில் 18.5 லட்சம் இந்த தேர்வை எழுதி இருந்தனர். பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் ஆர்வமுடன் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
காலிப்பணியிடம்: 7301
VAO- 274
Junior Assistant: 3600+
Typist: 2100+
Steno typist- 1000+
தேர்வு எப்படி இருந்தது? வினாத்தாள் ஈசியா கஷ்டமா?
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் பேர் விண்ணப்பம் செய்து இருந்ததால் போட்டியை சமாளிக்க TNPSC தேர்வாணையம் தேர்வு தாளை சற்று கடினமாகவே அமைத்து இருந்தது. பல கேள்விகள் Group 1 மற்றும் UPSC தரத்தில் இருந்ததாக பலர் கூறுகின்றனர்.
தேர்வர்கள் கருத்து:
தேர்வு எழுதிய பல தேர்வர்கள் பல வருடங்கள் படித்து தயாராக சென்றதாக கூறுகின்றனர். இதற்கு முன்பு நடந்த Group 2,4 தேர்வுகளை ஒப்பிடுகையில் இந்த தேர்வு கடினமாக இருந்ததாக கூறுகின்றனர்.
குறிப்பாக பொதுஅறிவு மற்றும் கணிதம் அதிக கடினமாக இருந்ததாக கூறுகின்றனர். தமிழ் மட்டுமே எளிதாக இருந்ததாக கூறுகின்றனர். நிறைய கேள்விகள் பொருத்துக, கூற்று காரணம், என்று இருந்ததால் கேள்வியை படித்து சரியான பதில் அளிக்க நேரம் போதவில்லை என்றும் கூறுகின்றனர்.
TNPSC GROUP 4 EXPECTED CUT OFF 2022
கடந்த காலங்களில் 180 மற்றும் 175 என்று இருந்த TNPSC GROUP 4 CUT OFF இந்த ஆண்டு 160+ இருந்தாலே போதும் என்று பலர் கூறுகின்றனர். வினாத்தாள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் சிலர் 170+ எடுத்து உள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
இன்னும் டி. என். பி. எஸ். சி தேர்வாணையம் TENTATIVE KEY ANSWER விடவில்லை. அது இன்னும் சில தினங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வந்த பின்பே மாணவர்களின் உண்மையான மதிப்பெண் அறியமுடியும். தனியார் வெளியிடும் Answer key மற்றும் tnpsc வெளியிடும் Tentative answer key சில கேள்விகளின் பதில்கள் மாறுபடும்.
எதிர்பார்க்கப்படும் தோராயமான Cut off கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
1.கீழே கொடுக்கப்பட்டது 200 கேள்விக்கு எத்தனை கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து இருந்தால் என்ற அடிப்படையில் Cut off கூறப்பட்டுள்ளது.
2.அனைத்தும் ( -5, +5) மாற்றம் வரலாம்
Community | VAO/ JA/ Bill collector | Typist | steno typist |
---|---|---|---|
OC/ general | 170+ | 160+ | 155+ |
BC | 165+ | 155+ | 150+ |
BCM | 155+ | 150+ | 145+ |
MBC/DNC | 160+ | 155+ | 147+ |
SC | 155+ | 150+ | 145+ |
SCA | 150+ | 145+ | 140+ |
ST | 145+ | 140+ | 135+ |
குறிப்பு:
1. PSTM தகுதி உடைய ஆண்களுக்கு (-2).
பெண்களுக்கு ( -5) குறைவாக இருந்தாலும் கிடைக்கலாம்.
2. மாற்று திறனாளிகள் (-10) வரை குறைவாக வரும் 140+ இருந்தால் கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது
3. முன்னாள் இராணுவத்தினர் ( -10) குறைவாக இருந்தாலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 135+ எதிர்பார்க்கலாம்
4. ஆதரவற்ற விதவைகள் ( -10) வரலாம். 130+ உள்ளவர்கள் தேர்வாக வாய்ப்பு உள்ளது.
5. மேற்குறிப்பிட்ட Cut off கணிப்பு ஆண்களுக்கு அதிகமாக வரலாம். பெண்களுக்கு மட்டுமே கொஞ்சம் குறைவாக வர வாய்ப்பு உள்ளது.
Download TNPSC GROUP 4 Answer key 2022 click here