தமிழ்நாடு அரசு காவல்துறை குதிரை பராமரிப்பாளர் வேலைவாய்ப்பு

Tamil Nadu Government Police department Horse maintainer recruitment 2023

தமிழ்நாடு அரசு காவல் துறை குதிரைப் படையில் 10 குதிரை பராமரிப்பாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியுடைய நபர்கள் வரும் 03.04.2023 க்குள் தபால் வழியாக விண்ணப்பம செய்யுமாறு சென்னை பெருநகர காவல் அவர்களின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்குதிரை பராமரிப்பாளர்
காலியிடம்10
ஊதிய விவரம்Rs. 15700- 50000
வயது விவரம் ( 31.03.2023 ன் படி) குறைந்தபட்ச வயது:18
அதிகபட்ச வயது
General:30
BC/BCM/MBC/DNC:32
SC/SCA/ST:35
கல்வி தகுதிதமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி03.04.2023 மாலை 5.00 மணி
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரிகுதிரை பராமரிப்பாளர் விண்ணப்பம், காவல் ஆணையாளர் அலுவலகம், சென்னை பெருநகர காவல், வேப்பேரி, சென்னை -7
சான்றிதழ் சரிபார்க்கும் நாள் மற்றும் இடம்17. 04.2023 நேரம் காலை 07.00 மணி
இடம்: ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், ருக்குமணி இலட்சுபதி சாலை ( மார்ஷல் சாலை), எழும்பூர், சென்னை-08
TN Police horse maintainer 2023

முக்கிய குறிப்புகள்:

  1. ஒரு வெள்ளைத் தாளில் விளம்பரத்தில் அளிக்கப்பட்டுள்ள மாதிரி படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.
  2. விண்ணப்பங்கள் தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்
  3. ஆண்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய தகுதி உடையவர்கள்
  4. 17. 04.2023 அன்று சான்றிதழ் சரிபார்க்க ஆஜராக வேண்டும். இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மீண்டும் உரிமை கோர இயலாது.
  5. இப்பணிக்கு தேர்வாகும் பட்சத்தில், பணி நிமித்தமாக அவ்வப்போது உருவாக்கப்படும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணிபுரிய வேண்டும்.

குதிரை பராமரிப்பாளர் வேலைகள் கீழ்க்கண்டவாறு இருக்கும்

1.தினமும் காலை 4.30 மணிக்கு அறிக்கை செய்ய வேண்டும்.

2.குதிரைகளை எழுப்ப வேண்டும்.

3.குதிரைகள் படுத்திருந்த வைக்கோல்களை அகற்ற வேண்டும்.

4.குதிரை லாயத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

5.குதிரைகளின் சாணங்களை அதற்குரிய இடத்தில் கொண்டு போய் நிரப்ப வேண்டும்.

6.குதிரைகளின் உடம்பிலுள்ள அழுக்குகளை சுத்தம் செய்தல் வேண்டும்.

7. குதிரைகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை இடைவெளிவிட்டு தீவணம் வைக்க

வேண்டும்.

8.குதிரைகளுக்கு லாடம் கட்டும் பொழுது லாடம் கட்டுபவருக்கு உதவி செய்ய

வேண்டும். அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும்

9.குதிரைகளை கால்நடை மருத்துவமனைக்கு மாதந்தோறும் ஒரு முறையும் மற்றும் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அழைத்து செல்ல வேண்டும். குதிரை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டால் உடனிருந்து கவனிக்கப்பட வேண்டும்.

10. குதிரைகளுக்கு அதற்குரிய நேரத்தில் தண்ணீர் காட்ட வேண்டும்.

11.பணிக்குச் சென்று திரும்பும் குதிரைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

12. மூன்று நாட்களுக்கு ஒரு முறை குதிரைகளை குளிக்க வைக்க வேண்டும்.

விண்ணப்பம் மாதிரி படிவம்:

குதிரை பராமரிப்பாளர் மாதிரி விண்ணப்பம்

Download Tamil nadu police horse maintainer Notification & application form

Also Check

Latest government jobs 2023 notification click here

Leave a Reply