TNPSC Group 4 Result 2023 / Selection list/ Vacancy increase தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

 

TNPSC Group 4 Results 2023 & Vacancy increase பிப்ரவரியில் தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

TNPSC Group 4 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் 30 ல் தோராயமாக 7301 காலிப்பணியிடம் நிரப்ப அறிவிப்பை வெளியிட்டது . அதற்கு சுமார் தமிழகம் முழுவதும் 18 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். அதற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஜூலை 24 ல் நடத்தியது. இந்த தேர்வை தோராயமாக 15 லட்சம் பேருக்கு மேல் எழுதியுள்ள நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இட ஒதுக்கீடு வழக்கு

TNPSC தேர்வாணையம் மகளிர் இட ஒதுக்கீடு 30℅ சரியாக பின்பற்ற வில்லை என்று நீதிமன்றத்தில் ஆண்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இட ஒதுக்கீடு சரியாக பின்பற்ற சொல்லி நீதிமன்றம் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு அறிவுரை வழங்கியது. நீதிமன்றம் உத்தரவு படி தேர்வு பட்டியல் வெளியிட தொழில்நுட்ப பிரச்சினை உள்ளதால் அதை சரி செய்ய காலதாமதம் ஆனது. முதலில் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு முடிவுகள் நீதிமன்றம் உத்தரவுப்படி சரியான இட ஒதுக்கீடு முறையில் வெளியிடப்பட்டது. அதன் வரிசையில் குரூப் 4 தேர்வும் விரைவில் வரும் என்று தேர்வர்கள் கருதினர். ஆனால் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.

முதலில் அக்டோபரில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளிவரவில்லை, அப்புறம் நவம்பர் மற்றும் டிசம்பரிலும் வரவில்லை. டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு அறிவிப்பு வந்தது. பிப்ரவரி 2023 ல் TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று Result Declaration schedule ல் கூறப்பட்டது. இப்பொழுது பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் தேர்வு முடிவுகள் இந்த மாதம் உறுதியாக வருமா அல்லது மீண்டும் அடுத்த மாதம் என்று கூறுவார்களா என்று தேர்வர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

வதந்திகள்

இதற்கிடையில் சில பத்திரிக்கைகள் மற்றும் சமூக வலைதளங்களில் OMR விடைத்தாளை ஸ்கேன் செய்யும் மிஷினில் கோளாறு என்றும். அதனால் குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வர வாய்ப்பு குறைவு என்றும் மேலும் சில மாதம் ஆகலாம் என்று செய்திகள் பரவியது. இதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மறுப்பு தெரிவித்து. ஸ்கேனிங் மிஷன் எதும் கோளாறு இல்லை மேலும் இந்த மாதம் உறுதியாக வரும் என்று தெரிவித்துள்ளது. ( Help line number news).

TNPSC Group 4 Vacancy அதிகரிப்பு

தமிழகத்தில் அரசு காலிப்பணியிடம் பல துறைகளில் நிரப்ப படாமல் உள்ளது. பல ஆயிரம் காலிப்பணியிடம் உள்ளதாக கூறப்படுகிறது. சில துறைகளின் காலிப்பணியிடம் நடந்த முடிந்த குரூப் 4 தேர்வு 2022 ல் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் 2500 முதல் 3000 காலிப்பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக TNPSC ல் பணியாற்றும் உயர் அதிகாரியின் Twitter பக்கத்தில் பதிவுகள் வந்துள்ளது. மேலும் ஊடக மற்றும் பத்திரிக்கை செய்திகளும் இது உண்மை என்று கூறியுள்ளன. இது தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Group 4 Cut Off 2022 குறைய வாய்ப்பு

2500 முதல் 3000 காலிப்பணியிடம் அதிகரித்தால் கூடுதல் தேர்வர்கள் Select ஆவார்கள். Cut off அனைத்து வகையான பிரிவினருக்கும் குறைய வாய்ப்பு உள்ளது.

TNPSC Group 4 Results 2023 & Merit list எப்பொழுது?

மேலும் கட் ஆஃப் பற்றி தெரிந்து கொள்ள click here

தேர்வு முடிந்து ஆறு மாதம் ஆகியுள்ள நிலையில் தேர்வு பட்டியல் தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. மேலும் காலிப்பணியிடம் அதிகரிப்பு பணிகள் முடிந்த உடன் குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மாதம் இறுதிக்குள் தேர்வு பட்டியல் வெளியிட TNPSC முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. 15 லட்சம் தேர்வர்களின் எதிர்பார்ப்பு இந்த மாதம் நிறைவேறும் என்று கூறலாம். காலிப்பணியிடம் அதிகரித்து முடிவுகள் வந்தால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைவர். . தேர்வர்கள் TNPSC Group 4 Results & Selection list பார்க்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகார பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in மட்டுமே பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

Leave a Reply