TN village assistant Hall Ticket 2022 for interview out
TN village assistant hall ticket- interview |
Tamil Nadu village assistant Exam 2022
Tamil nadu village assistant exam 2022 , vacancy 2748, education qualification 5th pass/ Exam date 04.12.2022 .
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு கடந்த 04.12.2022 தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. எழுத்து தேர்வு என்பதால் புத்தகம் பார்த்தும், அல்லது சொல்வதை கேட்டு பிழையில்லாமல் எழுதுவதும், சில மாவட்டத்தில் 2, மதிப்பெண், 5 மதிப்பெண் கேள்விகளாக கிராம உதவியாளர் பணி சார்ந்து 30 மதிப்பெண்களுக்கு தேர்வு வைக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு கல்வி தகுதி 5 ஆம் வகுப்பு என்பதால் இப்படி தேர்வு வைக்கப்பட்டது. விண்ணப்பம் செய்த பலர் பட்டதாரிகள் என்பதால் மிக எளிதாக தேர்வு இருந்ததாக கூறுகின்றனர்.
Selection process:
கிராம உதவியாளருக்கு மொத்த மதிப்பெண் 100 ஆகும். அது பின்வருமாறு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி-10
வாகனம் ஓட்டும் திறன்-10
எழுத்துத்திறன்-30
வாசிப்பு திறன்-10
பிறப்பிடம்-25
நேர்காணல்-15
ஆக மொத்தம் 100, இதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், காலிப்பணியிடம் மற்றும் இன சுழற்சி முறை பின்பற்றி தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதில் கடந்த டிசம்பர் 04,2022 அன்று எழுத்து தேர்வு முடிவடைந்த நிலையில். தற்போது வாசிப்பு திறன், சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேர்காணல் அழைப்பாணை ( interview hall ticket ) வெளியிடப்பட்டுள்ளது.
Village Assistant Interview 2022
எழுத்து தேர்வை தொடர்ந்து வாசித்தல் / திறன் தேர்வு மற்றும் நேர்காணல் அந்த அந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நேர்காணல் 20.12.2022 அன்று தொடங்குகிறது.( மாவட்டம் வாரியாக தேதி மாறுபடலாம்) நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் நேரம் Hall ticket ல் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு நுழைவுச்சீட்டில் உள்ள நேரத்திற்கு 30 நிமிடம் முன்பாக வர வேண்டும். மற்றும் கைவசம் உள்ள அனைத்து அசல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
TN village assistant interview hall ticket 2022
முதலில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணல் அழைப்பாணை பதிவு அஞ்சல் வழியாக 12.12.2022 முதல் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
How to download tn village assistant hall ticket 2022 for interview
இணையதளத்தில் விரைவில் hall ticket பதிவேற்றம் செய்யப்பட்டு, அதை பதிவிறக்கம் செய்ய Link Activation செய்யப்படும்.
Step -1: go to official website
https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174
Step-2: Enter your Registration number & mobile number
Step-3: Enter captcha correctly
Step-4: finally click submit button
Step-5: Take print out
Download Village Assistant interview hall ticket 2022 click here
Note: ஆன்லைன் விண்ணப்பம் செய்தவர்களுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் Hall ticket Download link Activation செய்யப்படும்.
நேர்காணலுக்கு என்ன கொண்டு போகணும்
1. கைவசம் உள்ள அனைத்து அசல் சான்றிதழ்கள் என்று கூறப்பட்டுள்ளது
2. கல்வி தகுதி சான்றிதழ்கள்
3. சாதிச் சான்றிதழ்
4. இருப்பிடச் சான்றிதழ்
5. ஏதேனும் ஒரு அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ( ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, Pancard, Driving licence, etc.,)
6. வாகனம் ஓட்ட தெரிந்து இருந்தால், ஓட்டுநர் உரிமம் கொண்டு செல்லுங்கள்
7. உங்களுக்கு ஏதேனும் முன்னுரிமை இருந்தால் அதற்கான ஆவணம் கொண்டு செல்லுங்கள்
( உதாரணம், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள், PSTM, ஆதரவற்ற விதவைகள், கலப்பு திருமணம், முதல் பட்டதாரி, மற்றும் பல)
8. ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
9. அனைத்து அசல் சான்றிதழ்களின் நகல்கள் ( Xerox)கொண்டு செல்லுங்கள்
10. நேர்காணல் அழைப்பாணை ( Interview Hall ticket)
குறிப்பு:
நேர்காணலுக்கு அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள், மற்றும் வேறு எந்தவொரு மின்னனு சாதனங்களும் தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல கூடாது.