TN Village Assistant Exam 2022/ Syllabus & Exam Pattern / Download study material pdf

TN village Assistant Exam 2022/ Syllabus & Exam pattern

Village assistant syllabus
TN village Assistant Exam 2022

Tamil Nadu Village Assistant Exam 2022

Tamil Nadu revenue administration and disaster management  village Assistant jobs vacancy 2748 jobs examination 2022.

கிராம உதவியாளர் பணி 2022

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு 10.10.2022 அன்று வெளியிடப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 07.11.2022 வரை பெறப்பட்டது. இதற்கு தேர்வு 04.12. 2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
கிராம உதவியாளர் பணிக்கு கல்வி தகுதி 5 ஆம் வகுப்பு என்பதால் எழுத்து திறன் மற்றும் வாசிப்பு திறன் ஆகியவை உள்ளது. இதில் வாசிப்பு திறனுக்கு 10 மதிப்பெண்களும், எழுத்து திறனுக்கு 30 மதிப்பெண்களும் வழங்கப்படும். 
இந்த பதவிக்கு 5 ஆம் வகுப்பு கல்வி தகுதி என்றாலும் தமிழகத்தில் வேலையில்லாத பட்டதாரிகளும் விண்ணப்பம் செய்து உள்ளனர். 
மேலும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆதரவற்ற விதவைகள், மாற்று திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் என்று அவர்களும் விண்ணப்பம் செய்து உள்ளனர். விண்ணப்பம் செய்த அனைவருக்கும் வரும் 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை எழுத்து தேர்வு நடைபெறுகிறது. 

TN Village Assistant hall ticket 2022

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பம் செய்தவர்களுக்கு அஞ்சல் வழியாகவும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு பதிவ செய்த மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி ( SMS) வழியாக நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய Link அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Download TN village assistant hall ticket 2022 click here 

TN village Assistant Syllabus 2022

Writing skill test by prescribing a common passage with words not exceeding 100 words preferably about 
1.the profile of the village 
or 
2.details of classification of lands 
Or 
3. Village accounts
Or
4. As desired by the collector. 

Reading skill. 

Reading skill may be tested by asking the candidates to read a passage taken out randomly by the examiner from any quality books. 

கிராம உதவியாளர் பாடத்திட்டம்-2022

100 வார்த்தைகளுக்கு மிகாமல் கிராமங்கள் குறித்த தகவல்கள், நில வகைப்பாடு, கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யும் ஏதேனும் ஒரு தலைப்பில் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்பட்டு தேர்வு வைக்கப்படும். வாசிப்பு திறனுக்கு ஒரு புத்தகம் கொடுத்து ஒரு பத்தி படிக்க சொல்லி மதிப்பெண் வழங்கப்படும். 

கேள்விகள் எப்படி கேட்கலாம்? 

  • கிராமங்கள் குறித்த தகவல்கள்
  • தங்கள் மாவட்டம் சார்ந்த கேள்விகள்
  • கிராம உதவியாளர் பணி சார்ந்த கேள்விகள்
  • நில அளவுகள்
  • மத்திய மாநில அரசு நல திட்டங்கள்
  • நடப்பு நிகழ்வுகள்
  • சுகாதாரம் 
  • மகளிர் முன்னேற்றம்
  • பதிவுத்துறை என்றால் என்ன
  • வருவாய் துறை என்றால் என்ன
  • பட்டா மற்றும் சிட்டா மற்றும் அடங்கல் என்றால் என்ன
  • கிராமத்தின் நில வகைப்பாடு ( நஞ்சை புஞ்சை) 
  • ஊராக வேலைவாய்ப்பு சார்ந்த கேள்விகள்
  • பேரிடர் காலங்களில் கிராம உதவியாளர் பணி 
  • கிராமத்தில் நடக்கும் இறப்பு, பிறப்பு, சண்டைகள், தீ, விபத்து, விழாக்கள் அல்லது கிராம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அவற்றில் கிராம உதவியாளரின் பங்கு என்ன
  • கிராம கணக்குகள் மற்றும் பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த கேள்விகள்
  •  முக்கிய தலைவர்கள் பற்றி கட்டுரை
  • மேல் அதிகாரிக்கு தகவல் கொடுக்கும் முறை, கடிதம் வரைதல் 
  • அலுவலக பராமரிப்பு பணிகள்
  • நமது மாநில மற்றும் மாவட்ட தகவல்கள்
இப்படி ஏதேனும் ஒரு தலைப்பில் அல்லது பல தலைப்பில் கேள்விகள் கேட்கப்பட்டு தேர்வு வைக்க வாய்ப்பு உள்ளது.

தேர்வை எப்படி எதிர்கொள்வது? 

கேட்கும் கேள்வியை நன்கு புரிந்து, அதற்கு தேவையான முக்கிய குறிப்புகளை மனதில் பதிந்து அதை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் சிறு சிறு பத்தியாக பிரித்து எழுத வேண்டும். தெளிவான மற்றும் முக்கிய Important points ஐ கோடிட்டு காட்டலாம். தேர்வை எழுத கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

எங்கு படிப்பது? எப்படி படிப்பது? 

கிராம நூலகங்கள், மற்றும் அரசு இணையதளங்களில் கிராம மற்றும் மாவட்ட தகவல்கள், கிராம உதவியாளர் பணி மற்றும் கிராம கணக்குகள் சார்ந்த தகவல்களை தேடி பிடித்து படித்து தெரிந்து கொள்ளலாம். கிராம உதவியாளர் பணி சார்ந்த சந்தேகங்களை ஏற்கனவே பணியில் இருக்கும் கிராம உதவியாளர் அல்லது கிராம நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

Village Assistant Study material & Links

TN Village assistant exam 2022 Links
Village assistant Jobs nature & Village account click here
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை   click here
தமிழ்நாடு அரசு இணையதளம் click here
Study material-1 click here
Study material-2 click here

Leave a Reply