TNUSRB PC Answer key 2022/ Main paper & Tamil eligibility test question paper download pdf

TNUSRB PC ANSWER KEY 2022 PDF DOWNLOAD

TNUSRB PC 2022
TNUSRB PC 2022 ANSWER KEY

TNUSRB PC Exam 2022

Tamil Nadu uniformed services recruitment board conducted the examination for the post of police constable grade 2, jail warder and firemen jobs in tamil nadu police service. Total vacancy 3552. The exam conducted on 27.11.2022  all over tamil nadu. 

தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்வு 2022

தமிழகத்தில் காலியாக உள்ள 3552  பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு 2022 அறிவித்து இருந்தது. அதில் ஆயுதப்படை காவலர்கள் 2180, தமிழ்நாடு சிறப்பு படை காவலர் 1091, இரண்டாம் நிலை சிறைக் காவலர் 161 மற்றும் தீயணைப்பாளர் 120 ஆகிய பணிகளுக்கு இன்று 27.11.2022 ( ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடந்தது. 
இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 3.67 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து இருந்த நிலையில் 67000 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆகையால் 3 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. 

தேர்வு எப்படி இருந்தது? 

இந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வு பத்தாம் வகுப்பு தகுதி கொண்டது. முதல் முறையாக தமிழ் தகுதி தேர்வு மற்றும் முதன்மை எழுத்து தேர்வு என்று இதற்கு தேர்வு வைக்கப்பட்டது. தமிழ் தகுதி தேர்வாக 80 கேள்விகள் மற்றும் முதன்மை எழுத்து தேர்வில் 70 கேள்விகள் ஆக மொத்தம் 150 கேள்விகளுக்கு 2.40 மணி நேரம் தேர்வு வைக்கப்பட்டது. 
தேர்வு எழுதிய மாணவர்கள் கூறிய கருத்துப்படி தமிழ் தகுதி தேர்வு கேள்விகள் கடினமாகவும். முதன்மை எழுத்து தேர்வில் பொது அறிவு ஓரளவுக்கு எளிதாகவும், உளவியல் மிக எளிதாகவும் இருந்ததாக கூறுகிறார்கள். 
தமிழ் தகுதி தேர்வில் கட்டாயம் 80 கேள்விக்கு 32 மதிப்பெண் எடுக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்து தேர்வு மதிப்பிடப்படும்.  தமிழ் தகுதி தேர்வு மதிப்பெண் Cut off ல் சேர்த்து கொள்ளப்பட மாட்டாது.முதன்மை எழுத்து தேர்வில் 70 கேள்விகளுக்கு 25 மதிப்பெண் என்பது குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் 70 கேள்விகளுக்கு அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் அந்த அந்த இட ஒதுக்கீடு படி தேர்வு  செய்யப்படுவார்கள். 
எழுத்து தேர்வில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் படி தோராயமாக 17,760 பேர் தேர்வாக வாய்ப்பு உள்ளது. 

TNUSRB CUT OFF 2022 என்ன வரும்? 

கடந்த ஆண்டை விட காலிப்பணியிடம் குறைவு என்பதாலும் மற்றும் தேர்வு எளிதாக இருந்த காரணத்தால் Cut off உயரவே வாய்ப்பு உள்ளது. தோராயமாக  முதன்மை தேர்வில் 70 க்கு 50 க்கு மேல்  எடுத்தவர்கள் உடற்தகுதி தேர்வுக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது. 

TNUSRB PC ANSWER KEY 2022

Download tnusrb pc constable tentative answer key 2022 pdf
TNUSRB PC ANSWER KEY 2022 Link
Download tnusrb pc answer key 2022 main paper( tentative) click here
TNUSRB PC Tamil eligibility test answer key 2022( Tentative) click here
Download TNUSRB PC answer key 2022 by official  click here
Tnusrb official website click here

Also check
TNUSRB PC 2022 CUT OFF ANALYSISclick here

Leave a Reply