TNPSC GROUP 2,2A Preliminary Expected cut off 2022
TNPSC GROUP 2 CUT OFF 2022 |
TNPSC GROUP 2,2A Exam 2022:
Tamil Nadu public service commission
TNPSC GROUP 2,2A preliminary தேர்வானது 21 May 2022 Saturday நடந்தது. இதில மொத்தம் விண்ணப்பம் செய்து நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து உள்ளவர்கள் 11.78 லட்சம் பேர். ஆனால் பல்வேறு காரணங்களால் 1.83 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுத வில்லை. மேலும் சில தேர்வர்கள் 9.00 மணிக்கு சரியாக வரவில்லை என்று திருப்பி அனுப்பியதாகவும் செய்திகள் வந்துள்ளது.
ஆக மொத்தம் இந்த ஆண்டு 9.94 லட்சம் பேர் இந்த குரூப் 2 தேர்வை எழுதி உள்ளார்கள்.
மொத்த காலிப்பணியிடம்: 5529
எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நேர்காணல் அல்லாத பணிக்கு 5413 காலிப்பணியிடம் வந்துள்ளது. நேர்காணல் உள்ள பதவிக்கு வெறும் 116 காலிப்பணியிடம் வந்துள்ளது. ஆனால் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் இந்த காலிப்பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
தேர்வு எப்படி இருந்தது?
தேர்வு எளிமையாக இருந்தாக தேர்வர்கள் கூறுகிறார்கள். ஆனால் பொதுஅறிவில் வரும் 75 கேள்விகள் மட்டும் சற்று கடினமான இருந்ததாக கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும் தமிழ் மற்றும் கணிதம் எளிதாக இருந்ததால் முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தேர்வர்கள் கூறுகிறார்கள்.
TNPSC GROUP 2,2A Expected cut off 2022
மொத்த காலிப்பணியிடம் 5529 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வில் இருந்து 1:10 என்ற விகிதத்தில் தோராயமாக 55 ஆயிரம் பேர் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிப்பார்கள். ஒரே மதிப்பெண் பெற்று cut off அதிகம் பெற்றவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். ஆக மொத்தம் தோராயமாக 65-70 ஆயிரம் பேர் அனுமதிக்க வாய்ப்பு உள்ளது.
இங்கு தோராயமான cut off கொடுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் மாணவர்களிடம் பெற்ற கருத்துக்கணிப்பு அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் tnpsc official cut off வெளிவரும் போது சிறு மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.
TNPSC GROUP II, IIA CUT OFF( PRELIMINARY)
Important Note:
1.Based on number of correct Question out off 200
2. இது (+5 OR -5) ஆக வர வாய்ப்பு உள்ளது.
3. இது குறைந்த பட்சம் வரக்கூடிய cut off
Category | General | Womens | PSTM(General) | PSTM(Womens) | Others( Ex-Servicemen, PWD, Transgender, destitute widow) |
---|---|---|---|---|---|
OC/ General | 147 | 145 | 140 | 137 | 130 |
BC | 140 | 137 | 135 | 125 | 110-120 |
BCM | 130 | 120 | 110 | 100 | 97+ |
MBC/DNC | 137 | 135 | 130 | 120 | 100+ |
SC | 130 | 125 | 120 | 115 | 100+ |
SCA | 125 | 120 | 110 | 100 | 95+ |
ST | 115 | 110 | 105 | 97-100 | 95+ |
குறிப்பு: 1.மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள், மூன்றாம் பாலினத்தவர் இவர்களுக்கு மேற்குறிப்பிட்ட மதிப்பெண்ணை விட குறைவாக வர அதிக வாய்ப்புகள் உள்ளது.
2. குறைந்த பட்சம் அனைத்து வகுப்பினருக்கும் 90 மதிப்பெண் அதாவது 45 கேள்விகள் சரியாக எழுதினால் குறைந்தபட்ச தகுதியாக வைக்கப்பட்டுள்ளது.
Also check TNPSC GROUP 2,2A ANSWER KEY 2022 click here