முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எப்பொழுது?
PGTRB 2021 EXAM DATE |
POST GRADUATE ASSISTANT/PHYSICAL EDUCATION GRADE-I AND COMPUTER INSTRUCTOR GRADE I -2021-2022
PGTRB NOTIFICATION 2021
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை- 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் 01/2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வந்தது.
VACANCY:2207
DATE OF NOTIFICATION | 09.09.2021 |
---|---|
COMMENCEMENT OF SUBMISSION OF APPLICATION THROUGH ONLINE MODE | 16.092021 |
LAST DATE FOR SUBMISSION OF APPLICATION THROUGH ONLINE MODE | 17.10.2021 |
DATE OF COMPUTER BASED EXAMINATION | 13.11.2021, 14.11.2021 &15.11.2021 |
அறிவிப்பு வெளியாகும் போது விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2021 என்றும் தேர்வு நடைபெறும் தேதி நவம்பர் 13,14,15 என்றும கொடுக்கப்பட்டது.
ஆனால் பல முறை பல்வேறு தொழில்நுட்ப காரணங்கள் ONLINE APPLICATION FORM ERROR மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் செய்வது தொடர்பான பிரச்சினை என்று பல்வேறு காரணங்களுக்கு இந்த தேர்வுக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு கடந்த 14.11.2021 முடிவுற்றது.
ஆகையால் NOTIFICATION ல் கொடுத்த TENTATIVE DATE படி தேர்வு நடைபெறவில்லை.
தமிழகத்தில் உள்ள பல லட்சம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்து படித்துவரும் நிலையில் இந்த தேர்வு எப்பொழுது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல முறை இந்த தேர்வு பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு. இந்த அறிவிப்பு மீண்டும் வந்தது ஆனால் தேர்வு குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறாமல் போனது. தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.மீண்டும் தேர்வு எப்பொழுது நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடாமல் இருக்கிறது.
இது ஆசிரியர்கள் மத்தியில் பெறும் அதிருப்தி உருவாக்கி உள்ளது. பல முறை தள்ளி வைக்கப்பட்ட தேர்வு இனி எப்பொழுது நடைபெறும் என்று தெரியாமல் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
DOWNLOAD PGTRB SYLLABUS 2021 CLICK HERE
தேர்வு எப்பொழுது?
கொரோனா மூன்றாம் அலை மற்றும் ஒமிக்கரான் பெருந் தொற்று பரவி வரும் இந்த நிலையில் இந்த தேர்வு எப்பொழுது நடைபெறும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
கல்வி வட்டாரத்தில் கிடைத்த செய்தியின் அடிப்படையில் இந்த தேர்வு என்பது வரும் பிப்ரவரி அல்லது மார்ச் 2022 ல் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பதை பொறுத்து நடைபெறும் என்று கூறுகிறார்கள்.
தேர்வர்கள் கோரிக்கை
விண்ணப்பம் செய்து தேர்வுக்காக காத்து கொண்டு இருக்கும் தேர்வர்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான தோராயமான தேதி( TENTATIVE DATE) அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Expected exam date & hall ticket
TENTATIVE FOR ONLINE EXAMINATION | JANUARY/FEBRUARY 2022 |
---|---|
DOWNLOAD YOUR HALL TICKET | CLICK HERE |