தமிழ்நாடு அரசு 800 பேருக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி TNPSC, SSC, IBPS, RRB/ உடனே விண்ணப்பம் செய்யுங்கள்

  • Post category:tnpsc

தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச போட்டித் தேர்வு கோச்சிங் , TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB

தமிழ்நாடு அரசு TNPSC, SSC, IBPS, RRB, etc., போன்ற போட்டித் தேர்வுக்கு படிக்கும் 800 படித்த இளைஞர்களுக்கு இலவச பயிற்ச வழங்க முடிவு செய்து அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பின்வறுமாறு கூறப்பட்டுள்ளது.

படித்த இளைஞர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி வழங்குதல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும் மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 இடங்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

தற்போது, மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு, புதிதாக இணையவழி மூலம் விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.

கல்வி மற்றும் வயது தகுதி:

1.குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.01-01-2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்

3.தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் செய்வது எப்படி:

பயிற்சி பெற விரும்புவோர் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளமான www.civilservicecoachingcom மூலம் இணையவழியாக 31 – 03 – 2023 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை முழுமையாக சரிபார்த்த பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணைய வழி மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின் திருத்தம் கோரி பெறப்படும் எந்த ஒரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

அழைப்பு கடிதம்( Hall ticket) எப்படி வரும்?

பயிற்சி வகுப்புக்கான அழைப்புக் கடிதம் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப்பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com இல் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட அழைப்புக் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து குறித்த நாள் மற்றும் நேரம் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அழைப்புக் கடிதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது.

Selection process:

பத்தாம் வகுப்பு மொத்த மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையத்தில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

உணவு மற்றும் தங்கும் வசதி எப்படி?

உணவு மற்றும் தங்கும் வசதிகள் இப்பயிற்சி மையங்களில் இல்லை.

வகுப்பு நேரம் : தேர்வர்கள் பயிற்சிக்கு தினமும் வந்து செல்லும் வகையில் பிற்பகல் 02.00 மணி முதல் 05.00 மணி வரை வாராந்திர வேலை நாட்களில் மட்டும் நடைபெறும். பயணப்படிகள் வழங்கப்பட மாட்டாது. வருகைப்பதிவு மிகவும் அவசியம்

பயிற்சி வகுப்பிற்கான சேர்க்கை இட ஒதுக்கீடு விவரங்கள்

CommunityReservation details
general31℅
BC26.5℅
BCM3.5℅
MBC/DNC20℅
SC15℅
SCA3℅
ST1℅
Total100℅
Vacancy Reservation

சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் கோரும் உரிமைகளுக்கான தகுதிகள் இவ்வறிக்கை நாளன்று இருக்க வேண்டும். மற்றும் தகுதி வாய்ந்த அலுவலரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் சேர்க்கையின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

உதவிகள் மற்றும் சந்தேகங்கள் கேட்க தொடர்பு கொள்க

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய 7373532999,9894541118,8667276684,8489334419, மற்றும் மின்னஞ்சல் முகவரி ceccchennai@gmail.com & ceccnandanam@gmail.com ஆகியவற்றை தொடர்பு கொள்க

தமிழ்நாடு அரசு இலவச போட்டித் தேர்வு பயிற்சி விண்ணப்பம் Overview

TN Government Free competitive coaching Date & link
Vacancy800
Education qualification10th
Minimum age limit18
Online application start15.03.2023
Online application last date31.03.2023
Application feeNil
Selection methodBased on 10th marks
Download Notification pdfClick here
Apply online application Click here
Official websitehttps://www.civilservicecoaching.com/
TN govt free competitive exam coaching online application 2023

Leave a Reply