TNUSRB PC Expected CUT OFF 2022
TNUSRB PC CUT OFF 2022 |
Tamil Nadu police constable Exam 2022
Tamil Nadu uniformed services recruitment board invited application from eligible candidates through online for Grade 2 police constable, jail warders and firemen. Total vacancy 3552. Exam conducted on 27.11.2022 Sunday.
தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்வு 2022
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3552 இரண்டாம் நிலை காவலர் களுக்கான எழுத்து தேர்வினை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த 27.11.2022 அன்று நடத்தியது. இதற்கு விண்ணப்பம் 3.67 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து இருந்த நிலையில். 67000 பேர் தேர்வு எழுதவில்லை. தோராயமாக 3 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதி உள்ளனர்.
இரண்டாம் நிலை காவலர் தேர்வு என்பது பத்தாம் வகுப்பு தகுதி கொண்டது. இந்த தேர்வு தமிழ் மொழி தகுதி தேர்வு மற்றும் முதன்மை எழுத்து தேர்வு என்று மொத்தம் 150 கேள்விகளுக்கு 2.40 மணிநேரம் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ் மொழி தகுதி தேர்வுக்கு 80 வினாக்கள், முதன்மை தேர்வுக்கு 70 வினாக்கள் இடம் பெற்று இருந்தது.
தேர்வு எப்படி இருந்தது?
தமிழ் மொழி தகுதி தேர்வு சற்று கடினமாகவும். முதன்மை எழுத்து தேர்வு எளிதாகவும் இருந்ததாக தேர்வு எழுதிய தேர்வர்கள் கூறுகின்றனர்.
தமிழ் மொழி தகுதி தேர்வில் 80 வினாக்களுக்கு 32 வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் முதன்மை எழுத்து தேர்வு மதிப்பெண் எடுத்து கொள்ளப்படமாட்டாது.
உடற்தகுதி தேர்வுக்கு முதன்மை எழுத்து தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Download TNUSRB PC Answer key 2022 click here
TNUSRB PC EXPECTED CUT OFF 2022
முந்தைய ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காலிப்பணியிடம் குறைவு என்பதாலும். முதன்மை எழுத்து தேர்வு வினாக்கள் எளிதாக இருந்த காரணத்தினாலும் Cut Off உயரவே வாய்ப்பு உள்ளது.
3552 காலிப்பணியிடங்களுக்கு 1:5 என்ற விகிதத்தில் உடற்தகுதி தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆகையால் தோராயமாக 17,760 பேர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோராயமாக எதிர்பார்க்கப்படும் Cut off கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது (+3, -3) வேறுபாடு வர வாய்ப்பு உள்ளது. இது முதன்மை எழுத்து தேர்வு 70 க்கு குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முதன்மை எழுத்து தேர்வு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்:25( அனைத்து பிரிவு)
ஆண்கள்:
TNUSRB PC EXPECTED CUT OFF 2022 ( COMMUNITY) |
CUT OFF |
---|---|
UR/OC | 60 |
BC | 55 |
BCM | 52 |
MBC/ DNC | 55 |
SC | 55 |
SCA | 52 |
ST | 50 |
Ex- Servicemen | 45 |
Sports | 45 |
பெண்கள்:
TNUSRB PC EXPECTED CUT OFF 2022 ( COMMUNITY) |
CUT OFF |
---|---|
UR/ OC | 50 |
BC | 50 |
BCM | 45 |
MBC/ DNC | 50 |
SC | 50 |
SCA | 47 |
ST | 45 |
Widow | 40 |
Sports | 40 |
மேலே குறிப்பிட்ட Cut off என்பது தோராயமான கணிப்பு மட்டுமே. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பே இறுதியானது. இருந்தாலும் 70 வினாக்களுக்கு 58 கேள்விகளுக்கு மேல் எடுத்தவர்கள் இப்பொழுது இருந்தே உடற்தகுதி தேர்வுக்கு தயாராகலாம். அவர்கள் தேர்வு ஆவது உறுதி.
இதில் PSTM தகுதி கொண்டவர்களுக்கு ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே இதை விட 1 அல்லது 2 மதிப்பெண் குறைவாக இருந்தாலும் உடற் தகுதி தேர்வுக்கு தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. பொதுவாக பத்தாம் வகுப்பு வரை பல பேர் தமிழ் வழியில் படித்து PSTM சான்றிதழ் பெற்று உள்ளார்கள்.
Check your result through TNUSRB Official website click here