TNUSRB SI Taluk AR New Syllabus 2022 in tamil pdf download

TNUSRB SI Taluk AR New Syllabus 2022 in tamil pdf download

tnusrb si taluk syllabus 2022
TNUSRB SI TALUK SYLLABUS 2022

Tamil Nadu Uniform Service Recruitment Board Released new syllabus 2022 for Sub-Inspector (Taluk, AR,TSP)

தமிழ்நாடு காவல் உதவி ஆய்வாளர்‌ (தாலுகா, ஆயுதப்படை & தமிழ்நாடு சிறப்பு காவல்‌ படை) பாடத்திட்டம்‌ தமிழில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம்‌

உதவி ஆய்வாளர்‌ [தாலுகா, ஆயுதப்படை & தமிழ்நாடு சிறப்பு காவல்‌ படை]

ஆட்சேர்ப்புக்கான எழுத்துத்தேர்வானது இரண்டு நிலைகளை கொண்டது.

பகுதி – I

தமிழ்‌ மொழி தகுதித்தேர்வு [பொது மற்றும்‌ 20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு

பொதுவான தேர்வு:

I. தமிழ்‌ மொழி தகுதித்தேர்வில்‌ தகுதி பெறுவது கட்டாயமாகும்‌. இத்தேர்வானது

கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்‌. ஒவ்வொரு வினாவிற்கும்‌

1 மதிப்பெண்‌ வழங்கப்படும்‌.

2. 20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும்‌, பொது ஒதுக்கீட்டில்‌

விண்ணப்பிப்பவர்களுக்கும்‌, தமிழ்‌ மொழித்‌ தகுதித்‌ தேர்வு ஒரே தேர்வாக

நடத்தப்படும்‌.

3. பொது மற்றும்‌ துறை சார்ந்த ஒதுக்கீட்டுக்கும்‌ சேர்த்து, ஒரே விண்ணப்பமாக

விண்ணப்பம்‌ செய்த விண்ணப்பதாரர்கள்‌ தமிழ்‌ மொழி தகுதித்‌ தேர்வினை

ஒருமுறை மட்டும்‌ எழுத வேண்டும்‌.

TNUSRB SI TALUK AR NOTIFICATION 2022 click here

தமிழ்‌ மொழி தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம்‌.

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின்படி 10-ம்‌ வகுப்புவரை கற்பிக்கப்படும்‌ தமிழ்‌

பாடநூல்களிலிருந்து அடிப்படை அறிவை சோதிக்கும்‌ வகைகளில்‌ கொள்குறி வகை வினாக்களாக இறுக்கும்‌. இதன்‌ பாடத்திட்டம்‌ மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பகுதி – அ

இலக்கணம்‌:

1. எழுத்து இலக்கணம்‌: தமிழ்‌ எழுத்துகளின்‌ வகையும்‌ தொகையும்‌, எழுத்துகளின்‌ பிறப்பு, முதலெழுத்துகள்‌ & வகை, சார்பெழுத்துகள்‌ & வகை, புணர்ச்சி, மொழி முதல்‌, இறுதி எழுத்துகள்‌, இன எழுத்துகள்‌, சுட்டு எழுத்துகள்‌, வினா எழுத்துகள்‌,மயங்கொலிகள்‌.

2. சொல்‌ இலக்கணம்‌: பெயர்ச்சொல்‌ & வகைகள்‌, வினைச்சொல்‌ & வகைகள்‌,

இடைச்சொல்‌, உரிச்சொல்‌, இலக்கியவகைச்‌ சொற்கள்‌, வேற்றுமை, ஆகுபெயர்‌, இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்‌, ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம்‌, பகாப்பதம்‌,மூவகை மொழிகள்‌, வழக்கு.

3.பொது இலக்கணம்‌: வழு, வழா நிலை, வழுவமைதி, தொகைறிலைத்‌ தொடர்‌,தொகாநிலைத்‌ தொடர்‌, வினா, விடை வகைகள்‌, பொருள்கோள்‌ & வகைகள்‌.

4. பொருள்‌ இலக்கணம்‌: அகப்பொருள்‌, புறப்பொருள்‌.

5. யாப்பு இலக்கணம்‌: யாப்பின்‌ உறுப்புகள்‌, அலகிடுதல்‌, பா வகை. (வெண்பா,ஆசிரியப்பா பொது இலக்கணம்‌).

6. அணி இலக்கணம்‌: உவமை அணி, உருவக அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி, வேற்றுமை அணி, பின்வறு நிலையணி & வகைகள்‌, பிறிது மொழிதல்‌ அணி, இரட்டுறமொழிதல்‌ அணி, தற்குறிப்பேற்ற அணி, தீவக அணி, நிரல்நிறை அணி.

7. மொழித்திறன்‌: வல்லினம்‌ மிகும்‌ இடம்‌, மிகா இடம்‌, தொடர்‌ இலக்கணம்‌.

8. பிரித்து எழுதுதல்‌, சேர்த்து எழுதுதல்‌, எதிர்ச்சொல்லை எழுதுதல்‌, பொருந்தாச்‌சொல்லை கண்டறிதல்‌, பிழை திருத்தம்‌, ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌சொல்லை அறிதல்‌.

பகுதி – ஆ

இலக்கியம்‌

1. திருக்குறள்‌, தொல்காப்பியம்‌, கம்பராமாயணம்‌, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு,ஐம்பெருங்காப்பியங்கள்‌, ஐஞ்சிறுகாப்பியங்கள்‌, அறநூல்கள்‌, பக்தி இலக்கியங்கள்‌,சிற்றிலக்கியங்கள்‌, நாட்டுப்புற இலக்கியங்கள்‌, புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள்‌ ஆகியவை தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, சிறப்புப்பெயர்கள்‌,தொடரை நிரப்புதல்‌.

பகுதி – இ

தமிழ்‌ அறிஞர்களும்‌ தமிழ்த்தொண்டும்‌

1. தமிழ்‌ அறிஞர்கள்‌, தமிழின்‌ தொன்மை, தமிழரின்‌ பண்பாடு, தமிழ்‌ உரைநடை,தமிழ்த்தொண்டு, சமுதாயத்தொண்டு தொடர்பான செய்திகள்‌ மற்றும்‌ மேற்கோள்கள்‌.

பகுதி – II.

1. முதன்மை எழுத்துத்‌ தேர்வு [பொது விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்‌]:

பொது ஒதுக்கீட்டு விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத்‌ தேர்வு 70

மதிப்பெண்கள்‌ கொண்டதாக இருக்கும்‌. இதில்‌ ஒவ்வொரு வினாவிற்க்கும்‌ 1/2 மதிப்பெண்‌ கொண்ட 140 கொள்குறி வகை வினாக்கள்‌ இருக்கும்‌. இவ்வெழுத்துத்தேர்வுக்கான நேரம்‌ 2 மணி 30 நிமிடங்கள்‌ ஆகும்‌. விண்ணப்பதாரர்கள்‌ முதன்மை எழுத்துத்தேர்வில்‌ தகுதி பெற குறைந்தபட்சம்‌ 25 மதிப்பெண்கள்‌ பெற்றிருக்க வேண்டும்‌. முதன்மை எழுத்து தேர்வு

கீழ்கண்ட பகுதிகளை கொண்டது.

1. பகுதி. (அ) – பொது அறிவு (40 மதிப்பெண்கள்‌ – 80 வினாக்கள்‌).

2. பகுதி. (ஆ) – உளவியல்‌ தேர்வு (30 மதிப்பெண்கள்‌ – 60 வினாக்கள்‌).

பகுதி – அ

பொது அறிவு:

UNIT I. பொது அறிவியல்‌: இயற்பியல்‌, வேதியியல்‌ மற்றும்‌ உயிரியல்‌ பாடங்களில்‌ உள்ள கண்டுபிடிப்புகள்‌ மற்றும்‌ படைப்புகள்‌, விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ அவர்களின்‌ பங்களிப்புகள்‌, மனித உடலியல்‌, நோய்கள்‌ மற்றும்‌ அவற்றின்‌ காரணங்கள்‌, சிகிச்சை மற்றும்‌ தடுப்பு முறைகள்‌, உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து,மரபியல்‌, விலங்குகள்‌, தாவரங்கள்‌, சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ சூழலியல்‌, தனிமங்கள்‌ மற்றும்‌ அவற்றின்‌ கூறுகள்‌, அமிலங்கள்‌, காரங்கள்‌ மற்றும்‌ உப்புகள்‌ மற்றும்‌ அதனுடன்‌ தொடர்புடைய பொருள்கள்‌, இயக்கம்‌, பொருளின்‌ பண்புகள்‌, ஒளி,மின்சாரம்‌ மற்றம்‌ தொடர்புடைய  தலைப்புகள்‌.

UNIT II. வரலாறு: சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து இன்றைய நவீன இந்தியா வரையிலான இந்திய வரலாற்றின்‌ நிகழ்வுகள்‌ மற்றும்‌ தேதிகள்‌, உலக வரலாற்றின்‌ முக்கிய நிகழ்வுகள்‌.

UNIT III. புவியியல்‌: இந்தியாவின்‌ பகுதிகள்‌, பருவ மழை மற்றும்‌ காலநிலை, பயிர்கள்‌,இந்திய நகரங்கள்‌ மற்றும்‌ இடங்கள்‌, முக்கிய துறைமுகங்கள்‌, கனிமங்கள்‌,தொழிற்கூடங்கள்‌, மின்‌உற்பத்தி நிலையங்கள்‌, வனங்கள்‌ மற்றும்‌ வனவிலங்குள்‌, தேசிய பூங்காக்கள்‌, இந்தியாவில்‌ மக்கள்‌ தொகை பரவல்‌ மற்றும்‌ இது தொடர்புடைய தலைப்புகள்‌.

UNIT IV. பொருளாதாரம்‌: இந்தியாவின்‌ விவசாயம்‌, தொழில்‌ வளர்ச்சி, கிராமப்புற வளர்ச்சி ,விலை கொள்கை, பணவீக்கம்‌, மக்கள்‌ தொகை மற்றும்‌ வேலையின்மை பிரச்சனை, இறக்குமதி மற்றும்‌ ஏற்றுமதி, 5 ஆண்டு திட்டம்‌ மற்றும்‌ இது தொடர்புடைய தலைப்புகள்‌.

UNIT V. இந்திய அரசியல்‌: இந்திய அரசியலமைப்பு, குடியுரிமை, தேர்தல்‌,

பாராளுமன்றம்‌ மற்றும்‌ மாநில சட்டமன்றங்கள்‌, நிர்வாகம்‌, நீதிஅமைப்பு,

உள்ளாட்சி நிர்வாகம்‌, மத்திய மாநில உறவு, வெளியுறவுக்கொள்கை மற்றும்‌

இது தொடர்புடைய தலைப்புகள்‌.

UNIT VI. பொது அறிவு மற்றும்‌ நடப்பு நிகழ்வுகள்‌: அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பத்தின்‌ சமீபகால வளர்ச்சி, இந்தியாவில்‌ அரசியல்‌ வளர்ச்சி, இந்தியா மற்றும்‌ தமிழ்நாட்டின்‌ கலை மற்றும்‌ கலாச்சாரம்‌, விளையாட்டுகள்‌ மற்றும்‌ தடகள விளையாட்டுகள்‌, தேசிய மற்றும்‌ சர்வதேச விருதுகள்‌, தேசிய மற்றும்‌ பன்னாட்டு அமைப்புகள்‌, பெயர்‌ சுருக்கங்கள்‌, யார்‌-யார்‌, புத்தங்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌, இந்தியா மற்றும்‌ அதன்‌ அண்டைநாடுகள்‌, இன்றையகால இந்தியா மற்றும்‌ இது தொடர்புடைய தலைப்புகள்‌.

பகுதி – ஆ

உளவியல்‌ தேர்வு [பொது மற்றும்‌ துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்‌]:

UNIT 1:தருக்க பகுப்பாய்வு (Logical Analysis) தகவலின்‌ பல்வேறு பரிணாமங்களை கண்டறிய எந்தவொரு தகவலையும்‌ தருக்க ரீதியாக பகுப்பாய்வு செய்தல்‌.

UNIT 2: எண்‌ பகுப்பாய்வு (Numerical Analysis): எண்ணியல்‌ திறன்‌ தொடர்பாக விரைவான பதில்‌ அளித்தல்‌ பற்றி சோதிக்கப்படும்‌.

UNIT 3:கருத்துப்பரிமாற்ற திறன்‌ (Communication Skills): தமிழ்‌ மற்றும்‌ ஆங்கில மொழிகளை சிறப்பாக கையாளும்‌ திறன்‌ பற்றி சோதிக்கப்படும்‌.

UNIT 4:தகவல்களை கையாளும்‌ திறன்‌ (Information Handling Skill): கொடுக்கப்பட்ட எந்த தகவலுக்கும்‌, தகவலின்‌ பல்வேறு அம்சங்கள்‌ அனுமானங்கள்‌ மற்றும்‌ இணைக்கப்பட்ட உண்மைகள்‌ பற்றி சோதிக்கப்படும்‌.

UNIT 5: மனத்திறன்‌ தேர்வு (Mental Ability): இந்த சோதனையானது தூண்டல்‌ அல்லது விலக்கு பகுத்தறிவு மூலம்‌ முடிவுகளை எப்படி எடுக்கப்படுகிறது என்று விண்ணப்பதாரர்களின்‌ திறனை சரிபார்க்க பயன்படுகிறது.

2. முதன்மை எழுத்துத்‌ தேர்வு [துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்‌]:

துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத்‌ தேர்வு 85 மதிப்பெண்கள்‌ கொண்டதாக இருக்கும்‌. இதில்‌ ஒவ்வொரு வினாவிற்க்கும்‌ 1/2 மதிப்பெண்‌ கொண்ட 170 கொள்குறி வகை வினாக்கள்‌ இறுக்கும்‌. இவ்வெழுத்துத்‌ தேர்வுக்கான நேரம் 3 மணி நேரம்‌ ஆகும்‌. விண்ணப்பதாரர்கள்‌ முதன்மை எழுத்துத்‌ தேர்வில்‌ தகுதி பெற குறைந்தபட்சம்‌ 30 மதிப்பெண்கள்‌ பெற்றிருக்க வேண்டும்‌. முதன்மை எழுத்து தேர்வானது கீழ்கண்ட பகுதிகளை கொண்டது.

பகுதி (அ) – (15 மதிப்பெண்கள்‌ – 30 வினாக்கள்‌).

பொது அறிவு

பாடத்திட்டம்‌ பொது ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களைப்‌ போலவே இருக்கும்‌.

பகுதி (ஆ) – (70 மதிப்பெண்கள்‌ – 140 வினாக்கள்‌).

உளவியல்‌ தேர்வு

உளவியல்‌ தேர்வுக்கான பாடத்திட்டம்‌ பொது ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களைப்‌ போலவே இருக்கும்‌.

மேற்கூறியவற்றைத்‌ தவிர, துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 

பகுதி-ஆ வில்‌

பின்வரும்‌ காவல்‌ துறை சார்ந்த பாடங்களில்‌ கூடுதலான கேள்விகள்‌ கேட்கப்படும்‌.

இந்திய தண்டனைச்‌ சட்டம்‌, குற்ற விசாரணை முறைச்‌ சட்டம்‌, இந்திய சாட்சியச்‌ சட்டம்‌, காவல்‌ நிலை ஆணைகள்‌ மற்றும்‌ காவல்‌ நிர்வாகம்‌.

TNUSRB SI TALUK AR TSP SYLLABUS DOWNLOAD
Syllabus in Tamil click here
Syllabus in English click here
Model Question Paper  click here

Government jobs 2022 Notification click here

Leave a Reply